tamilnadu
தமிழகத்தில் இரவு 10 மணி வரை… 34 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை எச்சரிக்கை..!
தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் 34 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் 34 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும்,
காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.