தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய வங்ககடல் மற்றும் அதை ஒட்டி உள்ள வடக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கின்றது. இதனால் வட மாநிலங்களில் கனமழை பெய்த போதிலும் தமிழகத்தில் பெரிய அளவு மழைக்கு வாய்ப்பு இல்லை. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.
இதன் காரணமாக இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. மேலும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.
அதன்படி சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.