தமிழகத்தில் இந்த 6 மாவட்டத்தில்… அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

தமிழகத்தில் இந்த 6 மாவட்டத்தில்… அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஒவ்வொரு நாளும் இயல்பை காட்டிலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்திருந்தது. அது மட்டும் இல்லாமல் சென்னையில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென்று நள்ளிரவு கன மழை கொட்டி தீர்த்தது.

நள்ளிரவு தொடங்கிய மழை விடிய விடிய மழையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தாலும் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.

இருப்பினும் தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கின்றது. அதன்படி திருவள்ளூர், சென்னை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.