tamilnadu
அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 12 மாவட்டங்களில் மழை பொழக்கப்போகுது… வானிலை ஆய்வு மையம் தகவல்…!
12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் அநேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.