Latest News
அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் கரையை கடந்தது.
இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.