Latest News
தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மலையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களிலும் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
மேலும் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது. அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.
மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.