கிழக்கு இந்திய வங்கக்கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்து தாழ்வு பகுதி ஒன்று உருவாகி இருக்கின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து இருந்தது. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலைமாவட்டம் பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு லேசான மலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகத்தில் அதிக மழையை எதிர்பார்க்க முடியாது. லேசான மலைக்கு வாய்ப்பு இருக்கின்றது. சென்னையில் அதிகாலையில் இருந்தே லேசான மழை மற்றும் மேகமூட்டத்துடன் காணப்படுகின்றது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்து இருக்கின்றது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.