tamilnadu
இந்த மூன்று மாவட்டங்களில் மழை பொழக்க போகுது… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!
தமிழகத்தில் தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல்டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஒரு இடங்களில் கன மழை முதல் அதிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
தமிழகத்தில் நாளை ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடம் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. தமிழகத்தில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.