Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

Latest Newstamilnadu

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தின் உள்பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்று ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் இன்று காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.