tamilnadu
தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில்… மழை வெளுக்க போகுது… வானிலை வெளியிட்ட எச்சரிக்கை…!
தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்து வந்தது. அதிகாலை வரை பெய்த மழை காரணமாக நகரின் குளிர்ச்சியான சூழல் நிலவுகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது” என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.