Latest News
கருணாநிதி குறித்த தமிழக அரசின் கோரிக்கை…ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு…
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான கருணாநிதி குறித்து தமிழக அரசின் சார்பில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையை ஏற்றுள்ளது. இது குறித்த ஒப்புதலை வழங்கியுள்ளது மத்திய அரசு.
கருணாநிதி ஜூன் மாதம் மூன்றாம் தேதி 1924ம் ஆண்டு பிறந்தார். இவரது நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கருணாநிதியின் பெயரில் நூறு வயதைக் குறிக்கும் விதமாக நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட தமிழக அரசு விரும்பியது.
இது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதியே இது குறித்த ஒப்புதல் அறிவிப்பு வெளியாகும் தமிழக எதிர்பார்த்தது.
ஆனால் சில காரணங்களால் அறிவிப்பு வெளியாகவில்லை இந்நிலையில் கருணாநிதி உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட சம்மதம் தெரிவித்து அதன் மீதான அரசாணையை அரசிதழில் வெளியிடப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன் மீதான ஒப்புதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
ஒரு புறம் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு 1924 – 2024’ அச்சிடப்பட்டும், மறுபுறம் தேசிய நினைவு சின்னமும் நாணயத்தின் மதிப்பான ரூபாய் 100ம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு இந்த கோரிக்கையானது விடுக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இதற்கான ஒப்புதல் அரசாணை அரசிதழில் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணா நிதியின் நூற்றாண்டையடுத்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தது. மறைந்த கருணாநிதியின் 100வது பிறந்த தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.