Connect with us

நாளை மறுநாள் தொடங்கும் கார் பந்தயம்… இதெல்லாம் தான் கொண்டுவர தடை… பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு…!

Latest News

நாளை மறுநாள் தொடங்கும் கார் பந்தயம்… இதெல்லாம் தான் கொண்டுவர தடை… பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு…!

நாளை மறுநாள் சென்னையில் கார் பந்தயம் தொடங்க உள்ள நிலையில் பார்வையாளர்கள் சில பொருட்களை எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் சென்னையில் கார்பந்தயம் தொடங்க உள்ள நிலையில் பார்வையாளர்களுக்கு சில கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “சென்னையில் ஃபார்முலா கார்பந்தயம் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியை பார்வையிட வருவோர் பிறருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்த ஒரு பொருளையும் எடுத்து வரக்கூடாது. அப்படி எடுத்து வந்தால் பாதுகாப்பு சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்படும். அவை திரும்ப தரப்பட மாட்டாது. பிளேடுகள், கத்திகள், கத்திரிக்கோல், ஆயுதங்கள், பாக்கெட் கத்தி, பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள், ஆயுதங்கள் போன்றவற்றைக் கொண்டு வரக்கூடாது.

மேலும் லேசர் லைட்டுகள், விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள், ஒலி அமைப்புகள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருள்கள், மெகா போன்கள், இசைக்கருவிகள், ஸ்பீக்கர் போன்றவற்றை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களான தீப்பெட்டிகள், பட்டாசுகள், எளிதில் எரியக்கூடிய திரவங்கள், மதுபானம் போன்றவற்றை எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் விதிமீறல் தெரிந்தால் பார்வையாளர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள். மேலும் அங்கீகரிக்கப்படாத விளம்பர பொருட்கள், பிளேயர் ஸ்டிக்கர்கள், புகையிலை பொருட்கள், கடற்கரை பந்துகள் போன்றவை எடுத்து வரவும் அனுமதிக்கப்பட மாட்டாது. குறிப்பாக தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், சீல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் கண்கள் வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பறக்கும் சாதனம் புகைபிடிக்கும் சாதனங்கள் ஆகியவையும் கொண்டு வரக்கூடாது.

ஜாதி, மதம், பாலினம் மற்றும் மதம், இனத்திற்கு எதிராக புண்படுத்தும் பதாகைகள் அல்லது தவறான பாரபட்சமான மொழி, தொப்பிகள், பதாகைகள் கொடிகள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in Latest News

To Top