சென்னையில் நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தாம்பரம் ரயில்வே யார்ட் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு இடையே செயல்பட்டு வந்த 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றது என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இது அந்த வழியாக பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது .
இதையடுத்து சென்னை கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் நாளை முதல் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை முடிவெடுத்து இருக்கின்றது. 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் சிரமத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

