tamilnadu
குடிபோதையில் 2 மாத குழந்தையை அடித்தே கொன்ற தந்தை… கொடூர சம்பவம்…!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தபால் அலுவலக வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகின்றார். இவரின் மனைவி சரோஜினி. இவர்களுக்கு சூரியதாஸ் என்ற இரண்டு மாத ஆண் குழந்தை இருக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் குழந்தையை தாக்கி இருக்கின்றார்.
இதில் குழந்தை படுகாயம் அடைந்தது. இதனால் குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசில் சரோஜினி புகார் கொடுத்திருந்தார். தகவலின் அடிப்படையில் போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். உயிரிழந்த குழந்தையின் உடலை பார்த்து தாய் சரோஜினி கதறி அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
குழந்தையை தாக்கியதற்காக மணிகண்டன் மீது தொடரப்பட்ட வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது. பெற்ற தந்தையே ஒரு குழந்தையை குடிபோதையில் அடித்துக் கொன்ற சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.