tamilnadu
டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில்… மீண்டும் சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!
பள்ளிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பள்ளிகளில் தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர்கதையாகி வருகின்றது.
தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொள்வதும் வாடிக்கையாக்கி வருகின்றது. இந்நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் ஈமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இது குறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் போலி இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர் இமெயில் மிரட்டல் தொடர்பாக சென்னை குற்றப்பிரிவு சைபர் கிராம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.