Connect with us

கருவில் இருப்பது பெண் குழந்தை… சட்ட விரோத கலைப்பால் உயிரிழந்த பெண்… பரபரப்பு சம்பவம்…!

tamilnadu

கருவில் இருப்பது பெண் குழந்தை… சட்ட விரோத கலைப்பால் உயிரிழந்த பெண்… பரபரப்பு சம்பவம்…!

கருவில் இருப்பது பெண் குழந்தை என்று அறிந்து அதனை சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த போது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. புதுக்கோட்டை மாவட்டம் அருகே கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து கருக்கலைப்பு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

இதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பொன்மராதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என்று கோரி பெண்ணின் உறவினர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

பொதுவாக கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று அறிந்து கொள்வது மிகவும் சட்டபூர்வமாக தவறு. கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரியவந்ததால் கருக்கலைப்பு செய்த போது பெண் உயிரிழந்திருக்கின்றார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரியும், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

More in tamilnadu

To Top