Latest News
அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு… தலைமை ஆசிரியை பணியிடை மாற்றம்… அதிரடி அறிவிப்பு…!
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்துவதற்கு அனுமதி வழங்கிய தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்.
சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என்ற மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாக மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதனை கண்டித்து தமிழகத்தை சேர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இது சம்பந்தமாக விசாரணை நடத்தவும் பள்ளி கல்வித்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை கண்டித்து சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது திருவள்ளூர் கோவில் பதாகை அரசு மேல்நிலை தலைமை ஆசிரியராக நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டிருக்கின்றார். மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.