tamilnadu
தமிழக ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் கிடைக்கும்… மக்களுக்கு வெளியான சூப்பர் தகவல்…!
தமிழக ரேஷன் கடைகளில் இனி ராகியும் வழங்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்புச் செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.
விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கு கூட்டுறவு மொத்த விற்பனை மண்டக்க சாலை ஆகியவற்றை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதையடுத்து விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கி ஏடிஎம் என்ற இயந்திர செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் வங்கிகளின் அலுவலர்கள் மற்றும் பணிகளின் வருகை பதிவேடுகள், அலுவலக பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தமிழக ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நியாய விலை கடைகளுக்கு முதல், இரண்டாம் வெள்ளிகளிலும், மூன்றாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை என்பதை மாற்றி ஒரே கிழமையில் விடுமுறை அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். அரிசி, சர்க்கரை தட்டுப்பாடு கிடையாது. பாமாயில் தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கடைகளில் அடையாளம் அறிய விரல் ரேகை மட்டும் அல்ல, வருங்காலங்களில் ஆண்ட்ராய்டு ஆப் மூலம் அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மாநிலம் முழுவதும் தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.