tamilnadu
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… பொண்டாட்டியால் வந்த வினை… இயக்குனர் நெல்சனிடம் போலீஸ் விசாரணை..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல ரவுடியான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை கொண்டு போலீசார் தேடி வருகிறார்கள். இதில் சம்போ உடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறி கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அவர் மலேசியாவுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகின்றது. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கின்றது. அவருடன் தொடர்பில் இருந்த பலரையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு சென்னை போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி இருக்கின்றது.
ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது ரெட் கார்னர் நோட்டீசும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கிடையில் மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக இயக்குனர் நெல்சன் மனைவி வழக்கறிஞர் மோனிஷாவிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.
மொட்டை கிருஷ்ணனும், இயக்குனர் நெல்சன் மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் என்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இயக்குனர் நெல்சன் மனைவி தொடர்ந்து செல்போனில் பேசி வந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ரவுடி மொட்டை கிருஷ்ணன் குறித்து திரைப்பட இயக்குனர் நெல்சனிடமும் இன்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சமன் கொடுத்த நிலையில் அடையாளில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குனர் நெல்சன் இடமும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.