Latest News
அரியலூரில் கள்ளிப்பால் குடித்த 5 மாணவர்கள்… மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி சம்பவம்…!
அரியலூர் மாவட்டத்தில் கள்ளிப்பால் குடித்த 5 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அரியலூர் மாவட்டம், குனமங்கலம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது .இந்த பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்கள் மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சேர்ந்து விளையாடு கொண்டிருந்தார்கள். அப்போது கள்ளிப்பால் வரும் கள்ளிச்செடியை உடைத்து அதிலிருந்து வெளியேறிய பாலை அவர்கள் சுவைத்திருக்கின்றார்கள்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கள்ளிப்பால் குடித்தது குறித்து மாணவர்கள் கூறியதால் அந்த ஐந்து பேரையும் அருகில் உள்ள அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காரணத்தால் பள்ளிகளில் இல்லம் தேடி கல்வித் திட்ட ஆசிரியர் மட்டுமே இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருக்கின்றது. இருப்பினும் பள்ளி நேரத்தில் எப்படி மாணவர்கள் வெளியே சென்று இது போன்ற வேலையை செய்தார்கள் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.