tamilnadu
நிலத்தகராறு, துப்பாக்கி சூட்டில் முடிந்த வாக்குவாதம்… திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்…!
நிலத்தகராறு தொடர்பாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்த நிலையில் வாக்குவாதம் முக்தி துப்பாக்கி சுட்டுக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுமலை வேளாண் பண்ணை பகுதியை சேர்ந்தவர் சவேரியார் மற்றும் வெள்ளையன். இவர்கள் இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்திருக்கின்றது. இன்று அதிகாலையில் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு இருக்கின்றது.
அப்போது வாக்குவாதம் கைகளப்பாக மாற ஆத்திரமடைந்த சவேரியார் அவர் வைத்திருந்த நாட்டுப துப்பாக்கியை வைத்து வெள்ளையனை சுட்டு இருக்கின்றார். அவர் சுட்டதில் வெள்ளையனுக்கு கழுத்து, தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் குண்டுகள் பாய்ந்து ரத்தம் வலியை தொடங்கியது.
இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் அருகில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் துப்பாக்கியால் சுட்ட சவேரியார் தலைமறைவாகி இருக்கின்றார். அவரை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.