Connect with us

எடப்பாடி பழனிச்சாமி ஒரு தற்குறி… அப்படி நடக்க வாய்ப்பே இல்லை… அண்ணாமலை கடும் தாக்கு…!

tamilnadu

எடப்பாடி பழனிச்சாமி ஒரு தற்குறி… அப்படி நடக்க வாய்ப்பே இல்லை… அண்ணாமலை கடும் தாக்கு…!

தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில் ராயப்பேட்டை ஓஎம்ஜி மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியிருந்தார். அதில் தமிழகத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்றால் 2026 தவிர வேறு வாய்ப்பு கிடையாது. காலம் கனிந்து இருக்கிறது.

பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சை பார்க்கும் போது துரைமுருகன், எ வா வேலு ஆகியோர் இருக்கும் மேடையில் உதயநிதி ஸ்டாலின் அரியணை ஏறினால் கலவரம் வெடிக்கும் என்பதை சொல்லாமல் சொன்னது போல் இருந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்னை விமர்சனம் செய்கின்றார்.

எடப்பாடி பழனிச்சாமியின் ஊரில் ஒரு கொலை நடந்தது. கைது செய்யப்பட்ட ஒருவர் சிறைக்கு சென்றார். கைது செய்யப்படாதவர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒளிந்திருந்தார். இன்று திமுகவில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் அன்று அதிமுகவின் அமைச்சர். அவர் கை காலை பிடித்து வழக்கை முடித்து வெளியே வந்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் தோற்றவர். நீங்கள் நேர்மை, நாணயத்தை பற்றி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்.

அதே கொங்கு பகுதியில் வந்தவன் தான் நான் கூவத்தூரில் நடந்தது அலங்கோலம். கூவத்தூரில் ஒப்பந்தம் அமைப்பில் முதலமைச்சரை தேர்வு செய்தீர்கள். அதன்பிறகு தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு என்னை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது. பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலை பற்றி பேச எடப்பாடி பழனிச்சாமி என்ற தற்குறிக்கு அதிகாரம் கிடையாது.

2026 செப்டம்பர் தேர்தலில் அதிமுகவுக்கு 4 இடம் கூட கிடைக்காது? இந்த மேடையில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்று நினைக்கும் தலைவர்களும் இருக்கிறார்கள். அதிமுகவும் எனக்கும் வாய்க்கால் பிரச்சனையா? 2019 வாரணாசியில் மோடி வேட்பு மனு தாக்கல் செய்யும்போது எடப்பாடி பழனிச்சாமியை கூட்டணியில் உள்ள ஒரு தலைவர் கூப்பிடுகிறார்.

அதற்கு அவர் தோற்கப் போகிற மோடிக்காக நான் ஏன் வரவேண்டும் என்று சொன்னார். என்னுடைய தலைவரை பற்றி எடப்பாடி பழனிசாமி அப்படி பேசினாரே, மானமுள்ள அண்ணாமலை கூட்டணி கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்ள முடியாது.  நாணயம் வெளியிட்டு விழாவில் பாஜக கலந்து கொண்டதை வைத்து திமுகவுக்கும் பாஜகவுக்கும் உறவு என்று பேசுகிறார்கள். இப்போது சொல்கிறேன் பாஜக ஒருபோதும் திமுகவுடன் உறவு வைக்காது. அதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர் பேசியிருக்கின்றார்.

More in tamilnadu

To Top