Latest News
திருப்பதி பிரம்மோற்சவ விழா… தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அக்டோபர் 1-ம் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சன பூஜை நடைபெறும். 4-ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கும்.
எட்டாம் தேதி தங்க கருட சேவையும் 12ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெரும். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இதனால் தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தமிழகத்திலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகளை ஆந்திர மாநில அதிகாரிகள் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150 சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் எவ்வளவு பேருந்துகள் இயக்கலாம் என்று தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. திருப்பதியில் நேற்று மற்றும் 67 ஆயிரத்து 668 பேர் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். 3.5 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக வசூல் ஆகியுள்ளது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.