Connect with us

tamilnadu

பாட புத்தகங்களின் விலை உயர்வு… எதற்காக..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!

Published

on

பாட புத்தகங்களின் விலை உயர்வு எதற்காக என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஒரே பாடத்திட்டத்தை படிப்பார்கள். வகுப்பு வாரியாக புத்தகங்களை அச்சிட்டு தமிழக பாடநூல் நிறுவனம் வழங்கியது.

மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு கட்டணங்கள் நிர்ணயித்தும் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இந்த புத்தகங்களின் விலை நடப்பு ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. 1 முதல் +2 வரையிலான வகுப்புகளுக்கு பாடப் புத்தகங்களின் பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தது.

40 முதல் அதிகபட்சமாக 90 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது. அதாவது ஒன்று முதல் 4-ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையிலும், 5 முதல் 7 ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் 30 முதல் 50 ரூபாய் வரையிலும், 8-ம் வகுப்பு புத்தகங்கள் 40 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையிலும், 9-ம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் 50 ரூபாய் முதல் 90 ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அன்பில் மகேஷ் அளித்து இருக்கின்றார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது : “தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு நியாயமான விலையில் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

முந்தைய ஆட்சிக்காலத்தில் 2015 -16 ஆம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 370 சதவிகிதமும், 2018 -19ம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 466 சதவிகிதமும் பாடநூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக 11 ஆம் வகுப்பு புவியியல் பாடப்புத்தகம் 466 சதவிகிதம், 11-ம் வகுப்பு வணிகவியல் பாடப்புத்தகம் 325 சதவிகிதம், 11ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகம் 300 சதவிகிதம் என பாடநூல்கள் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக 2013-14ம் கல்வியாண்டிலும் பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை காகிதம், மேல் அட்டை மற்றும் அச்சுக்கூலி ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாடப்புத்தகத்தின் விலை உயர்த்தப்படுவது என்பது வழக்கமான நடைமுறையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம் மற்றும் மேல் அட்டைகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும். மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. எனவே அந்த விலையேற்றங்களை ஈடுகட்டும் வகையிலேயே பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை. பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடபுத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட நூலகங்கள் மற்றும் அறிவு சார் மையங்களுக்கு தேவையான அளவு பள்ளி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News8 hours ago

முற்போக்கு அரசியல்வாதி… சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்…!

Latest News9 hours ago

கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா… காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்…!

Latest News9 hours ago

இந்தியா முழுவதும் கூலி லிப்-பை ஏன் தடை செய்யக்கூடாது…? உயர்நீதிமன்றம் கேள்வி…!

Latest News9 hours ago

அலுவலகத்தில் அத்துமீறிய கள்ளக்காதல் ஜோடி… நிர்வாகம் கொடுத்த அதிரடி தண்டனை…!

Latest News10 hours ago

பெண்ணை கற்பழித்து தலையை துண்டித்து… உடலை ரோட்டில் தூக்கி வீசிய கொடூரம்… உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!

Latest News10 hours ago

சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் மறைவு… தலைவர்கள் இரங்கல்..!

Latest News10 hours ago

தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் தங்கும் விடுதி… கட்டிடத்தை இடிக்க முடிவு… வெளியான அதிரடி உத்தரவு…!

Latest News11 hours ago

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

Latest News12 hours ago

ஆதார் கார்டு இன்னும் அப்டேட் பண்ணலையா..? டிசம்பர் 14ஆம் தேதி வரை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Latest News12 hours ago

திருப்பதி பிரம்மோற்சவ விழா… தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

Latest News6 days ago

மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!

Latest News3 days ago

திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு… ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு…!

Latest News4 days ago

பாத பூஜை செய்றது நமது கலாச்சாரம்… அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு…!

Latest News5 days ago

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு… விக்கிரவாண்டியில் நடத்த போலீஸ் அனுமதி…!

Latest News6 days ago

கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறையாக… 900 கோல் அடித்த முதல் வீரர்… ரொனால்டோ செய்த சாதனை…!

Latest News5 days ago

பள்ளி நிகழ்ச்சிகளை வரையறுப்பதற்கு தனி கமிட்டி… அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி…!

Latest News5 days ago

மத்திய வங்ககடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம்… வானிலை எச்சரிக்கை…!

Latest News7 days ago

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு… சர்ச்சையால் பள்ளி கல்வித்துறை விசாரணை…?

Latest News2 days ago

தெலுங்கானா வெள்ள பாதிப்பு… நிதி உதவி வழங்கிய சிம்பு… எவ்வளவு தெரியுமா…?

Latest News5 days ago

எதிரே ரயில்… மெட்ரோ டிராக்கில் ஓடிய பெண்… குண்டுகட்டாக தூக்கி வந்த அதிகாரிகள் வைரல் வீடியோ…!