Latest News
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக தான்… வைத்தியலிங்கம் பேட்டி…!
2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கட்சி தான் வெற்றி பெற்ற ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் எம்எல்ஏ வைத்தியலிங்கம் தெரிவித்து இருக்கின்றார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று தஞ்சையில் நிர்வாகிகள் ஏராளமானோரை சந்தித்தார். அப்போது வைத்தியலிங்கம் எம்எல்ஏ அவர்களுக்கு பலரும் தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்திருந்ததாவது: “தமிழ்நாட்டில் இருக்கின்ற அதிமுக தொண்டர்களில் 100% ல் 99.9 அதிமுகவில் இணைய வேண்டும். 2026 இல் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி கொண்டுவர வேண்டும் என்று எண்ணுகிறார்கள், அந்த எண்ணத்தை நிச்சயமாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆத்மா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.
2026ல் தமிழகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சி ஏற்படும் நாங்கள் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட யாரையும் இழக்க விரும்பவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள் விரும்பாதவர்கள் அவர்களாக வெளியேறி விடுகிறார்க.ள் இது காலத்தின் கட்டாயம். அதாவது ஒற்றை தலைமை இரட்டை தலைமை என்பது இணையும்போது ஒரு முடிவுக்கு வரும்,
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஒரு நல்ல முடிவு ஏற்படும். பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் செயல்பாடுகள் சட்டமன்ற தேர்தலில் அவர்களின் செயல்பாடுகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் எடப்பாடி பழனிச்சாமி இந்த இயக்கத்தை அழித்துவிடுவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கின்றார்.
அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செல்கின்றார். சசிகலா, தினகரன், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அனைவரையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். நிச்சயம் ஒற்றுமை வரும் 2026 இல் அதிமுக ஆட்சி அமையும் என்று அவர் கூறியிருக்கின்றார்.