---Advertisement---

பார்முலா 4 கார் பந்தயத்திற்கு சிக்கல்… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு… முக்கிய கட்சி செய்த சம்பவம்…!

Published on: August 10, 2024
---Advertisement---

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு பதிவு செய்திருக்கின்றது.

சென்னையில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கார் பந்தயம் நடைபெற இருக்கின்றது. இந்த கார் பந்தயத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 31ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக கார்பந்தயம் நடப்பதற்கு தடை வாங்க அதிமுக அரசு முடிவு செய்திருக்கின்றது. அவசர வழக்காக இந்த வழக்கை பட்டியல் இடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றது. சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் மிக்சாம் புயல் காரணமாக அந்த கார் பந்தயம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கும் அண்ணாசாலையில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்தியாவின் ரேசிங் சூப்பர் லீக் என்ற அமைப்பு சேர்ந்து உள்ளது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இது போன்ற சென்னை ஃபார்முலா போர் பந்தயம் நடத்த திட்டமிட்டு நிலையில் சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள மூன்றரை கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட சாலையில் இந்த போட்டி இரவு நடத்தப்பட உள்ளது.

தீவு தொடரில் தொடங்கும் இந்த கார் பந்தயம் அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைவது என்ற திட்டமிடப்பட்டிருக்கின்றது. தென் இந்தியா மற்றும் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு போட்டியாக இந்த பார்முலா 4 பந்தயம் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக தமிழக அரசு 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் செலுத்தி வரும் நிலையில் இதற்கு எதிராக எதிர்க்கட்சி வழக்கு தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now