tamilnadu
வரும் 16ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம்… அதிமுக தலைவர் எடப்பாடி அறிவிப்பு…!
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைவர எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கின்றார்.
நாளை மறுதினம் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எந்த தேதியும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 16ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அவசர செயற்குழு பொதுக்கூட்டம் வருகிற 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு நடைபெறும். சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழக புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் கழக அவை தலைவர் ஆர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், பிற மாநில கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றார்.