உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானதற்கு நடிகர் வடிவேலு நேரில் சென்று வாழ்ந்து தெரிவித்திருக்கின்றார்.
தமிழக அமைச்சரவையில் தற்போது அமைச்சர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். 4 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஜாமீனியில் இருந்து வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பான நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினை மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் வடிவேலு சந்தித்து இருக்கின்றார்.
அமைச்சர் உதயநிதி பார்த்ததும் கட்டி அணைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் வடிவேலு. இவர்கள் இருவரும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பார்கள். உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டதற்கு மனதார வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் வடிவேலு. மேலும் திரையுலகை சேர்ந்த ஏகப்பட்ட பிரபலங்கள் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.