tamilnadu
விஜய் சீமானுடன் அரசியல் பயணத்திற்கு நான் தயார்… அமீர் அதிரடி…!
விஜய் சீமானுடன் அரசியலில் இணைந்து பயணம் செய்வதற்கு தயார் என அமீர் கூறி இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வளம் வருபவர் அமீர். இவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் அழைத்தால் நிச்சயம் அவரது கட்சிக்கு செல்வேன் என்று கூறியிருந்தார். இதையடுத்து இன்று திருச்சி சுப்ரமணியம் பகுதியில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்திருந்ததாவது “கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு. திரை துறையில் கிராமங்களை தவிர்த்து விட்டு எந்த படத்தையும் எடுக்க முடியாது. அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். நான் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். எனது உள் உணர்வு அதை தான் சொல்கின்றது. விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் செல்வேன் .
என்னை பொறுத்தவரை விஜய், சீமான் ஆகிய இருவரும் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன். மேலும் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது மிக வருத்தமாக இருக்கின்றது. மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக தெரிகின்றது.
குறிப்பாக தமிழகத்தை புறக்கணித்ததை சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரிப்பது மேலும் வேதனை தருகின்றது. சட்டம் ஒழுங்கு மற்றும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சரியாகத்தான் உள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் மட்டும்தான் சட்டம் ஒழுங்கை பற்றி குறை கூறி வருகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.