Connect with us

தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்தால்… குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை… சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

tamilnadu

தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்தால்… குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை… சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கின்றது.

சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் என்று காலை வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது சுதந்திர தினத்தை ஒட்டி குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும் அதை நாளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் ஒரு வக்கீல் முறையீடு செய்திருந்தார்.

மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேசியக்கொடி ஏற்ற போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். தேசிய கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம். கொடி ஏற்றுவதை யாரும் தடுக்கக்கூடாது, நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் என்று நீதிபதி தெரிவித்து இருக்கின்றார்.

More in tamilnadu

To Top