tamilnadu
சதுரகிரியில் ஆடி அமாவாசை பெருவிழா… இவங்க எல்லாம் மலை ஏறாதீங்க…!
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது.
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் வருகிற 4-ம் தேதி ஆடி அமாவாசை விழா கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் சுவாமிக்கு பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெறும், மகா தீபாராதனை நடைபெறும். சதுரகிரி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சு நடைபெற்று வருகின்றது.
அமாவாசை தினத்தன்று சாமி தரிசனம் செய்வதற்காக பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் மலையேறி வந்து கோயிலில் தரிசனம் செய்வார்கள். தமிழக மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கு இடையே சுந்தரமகாலிங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதய நோயாளிகள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த நோயாளிகள், அல்சர் நோயாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், கண் பார்வை குறைபாடு இருப்பவர்கள், மிக வயதானவர்கள், ரத்த சோகை உள்ளவர்கள் யாரும் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.