tamilnadu
சுதந்திர தினவிழா… சென்னையில் 9,000 போலீசார்கள் குவிப்பு… தீவிர சோதனையில் போலீஸ்…!
நாடு முழுவதும் வருகிற 15-ம் தேதி சுதந்திர தின விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்காக 9000 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி சுதந்திர தின விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் 9,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பெயரில் சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு க ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின விழாவில் பேருரை ஆற்றுவார். இதனால் சுதந்திர தின விழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவு பெயரில் என் கண்ணன், ஆர் சுதாகரன், கே எஸ் நரேந்திர நாயர் ஆகியோர் மேற்பார்வையில் காவல் ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் என மொத்தம் 9,000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையுங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்ட தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு இருக்கின்றார்கள். மேலும் சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லை உட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.