Latest News
திருமங்கலம் அருகே பிரியாணி சாப்பிட்ட 39 பேருக்கு வாந்தி, மயக்கம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பிரியாணி சாப்பிட 39 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்து இருக்கும் வில்லூரில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு நிர்வாகிகளுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி உணவுகள் வழங்கப்பட்டது. இதில் சிலர் கூட்டம் நடந்த இடத்தில் சாப்பிட்டார்கள்.
பலர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டார்கள் பிரியாணி சாப்பிட சிறிது நேரத்தில் 50க்கும் மேற்பட்டோருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 17 பெண்கள் குழந்தைகள் உட்பட 39 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பாதிக்கப்பட்ட 39 பேரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது திமுக பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட கட்சியில் இருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இதுபோன்ற ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தெரிய வந்தது.
பொதுக்கூட்டத்தில் வினியோகம் செய்யப்பட்ட பிரியாணி தரம் குறைந்து இருந்ததாலும் கெட்டுப்போன இறைச்சி ப்பட்டதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.