கொரோனா வைரஸ் பீதியால் சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஏடிஎம்களை சுத்தம் செய்ய சொல்லி மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விமான நிலையங்கள், அலுவலகங்கள் என எல்லாவற்றையும் மூட அரசுகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோயில்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. தமிழக அரசு மார்ச் 31 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் சில தனியார் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீடுகளில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ள்ளன.
இந்நிலையில் சென்னையில் மிகவும் கூட்டமான பகுதிகளில் ஒன்றான தி நகரில் உள்ள கடைகளை மூட சொல்லி மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இடங்களில் ஒன்றான ஏடிஎம்கள் மூலம் வைரஸ் பரவாமல் இருக்க அவற்றை சுத்தம் செய்ய சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன மூலம் சென்னையில் உள்ள 3800 ஏடிஎம்கள் சுத்தம் செய்யப்பட உள்ளன.