Latest News
3 வயது குழந்தையை கொன்று வாஷிங்மெஷினில் போட்டு… எதிர்வீட்டுப் பெண் செய்த கொடூர சம்பவம்…!
முன் விரோதம் காரணமாக 3 வயது குழந்தையை படுகொலை செய்து அதை வாஷிங்மெஷினில் போட்டு மூடி வைத்திருந்த எதிர் வீட்டுப் பெண்ணை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரின் மனைவி ரம்யா. இவர்களுக்கு மூன்று வயது ஆண் குழந்தை இருக்கின்றது. அங்குள்ள அங்கன்வாடிக்கு சென்று பாடம் படித்து வருகின்றார் சஞ்சய். இவர்களின் எதிர் வீட்டில் வசிப்பவர் தங்கம்மாள். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
குழாயில் தண்ணீர் பிடிப்பது உள்ளிட்ட சிறிய சிறிய தகராறுகள் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. நேற்று காலை சஞ்சய் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவரின் பெற்றோர்கள் அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்வதற்கு குழந்தையை தேடி உள்ளார்கள். ஆனால் எங்கு தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் குழந்தையின் தந்தை விக்னேஷ் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பெயரில் போலீசார் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தேடி இருக்கிறார்கள். அப்போது தங்கம்மாள் வீட்டிற்கு சென்ற போது அவர் போலீஸ் வருவதை பார்த்து வீட்டின் பின்பக்கமாக குதித்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் போலீசார் அவரை விரட்டி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது குழந்தையை வாஷிங்மெஷினில் போட்டு வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வாஷிங்மெஷினை திறந்து பார்த்திருக்கிறார்கள். அதில் சாக்கு முட்டையில் கட்டி சஞ்சயை பிணமாக வைத்திருக்கின்றார். அவரது உடலை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தங்கம்மாளின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்திருக்கிறார். இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கின்றார். தங்கமாளின் மகன் துக்க நிகழ்ச்சிக்கு விக்னேஷ் குடும்பத்தினர் யாரும் வரவில்லை என்று கூறப்படுகின்றது.
தனது மகன் இறந்ததற்கு விக்னேஷ் குடும்பத்தினர் செய்வினை வைத்துவிட்டார்கள் என்பதால் அவரை பலி வாங்குவதற்கு தங்கம்மாள் இதுபோன்று செய்ததாக தெரிவித்திருந்தார். இதனால் தங்கம்மாள் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சஞ்சையை கடத்திக் கொண்டு வந்து சாக்கு முட்டையில் கட்டி வாஷிங்மெஷினில் போட்டு மூடி வைத்திருக்கின்றார். இதில் மூச்சு திணறல் ஏற்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.