tamilnadu
இந்த 3 மாவட்டங்களில்… கனமழை கொட்டி தீர்க்க போகுது… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை பெரம்பலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் சென்னையை பொருத்தவரை காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இருப்பினும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் வாய்ப்பு இருக்கின்றது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.