சென்னையில் 267 கிலோ தங்கம்… பாஜக பிரமுகருக்கு சம்மன் அனுப்ப முடிவு…!

சென்னையில் 267 கிலோ தங்கம்… பாஜக பிரமுகருக்கு சம்மன் அனுப்ப முடிவு…!

சென்னையில் விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் கடையை மையமாக வைத்து தங்கம் கடத்திய விவகாரத்தில் கடந்த இரண்டு மாதத்தில் ரூபாய் 167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட ஆறு பேருக்கு சமன் அனுப்ப சுங்க இலாகா துறை அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

சென்னையை சேர்ந்த youtube சபீர் அலி என்பவர் கடையில் பணியாற்றிய 7 பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டிருந்தது. இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வருபவரிடம் இருந்து தங்கத்தை பெற்று சுங்க சோதனை இல்லாமல் கடத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சபீர் அலி உள்ளிட்ட 9 பேர் கைதான நிலையில் பாஜக நிர்வாகி பிருத்வி என்பதற்கு சமன் அனுப்ப சுங்க இலாக்கா அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள். மேலும் சபீர் அலி கடை நடத்துவதற்கு விமான நிலைய ஆணையத்திற்கு ப்ருத்வி பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.