tamilnadu
2 லட்சம் மாணவர்கள்… நீட் முதுகலை நுழைவு தேர்வு இன்று தொடக்கம்…!
இரண்டு லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் முதுகலை தேர்வு இன்று தொடங்கி இருக்கின்றது.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை 9:30 முதல் மதியம் 12.30 வரை முதல் ஷிப்ட்டும், பிற்பகல் 3:30 மணி முதல் இரண்டாவது ஷிப்ட் தேர்வு நடைபெற இருக்கின்றது. தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.
நாடு முழுவதும் 2 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வானது இளநிலை நீட் தேர்வு முறைகேடு காரணமாக நடந்த சம்பவத்தால் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழக்கு தொடங்கப்பட்டது. ஆனால் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தேர்வு இன்று திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றது.