Latest News
2 சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம்… வாலிபர்கள் 2 பேர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!
2 சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 16 மற்றும் 17 வயதான சிறுமிகள் இரண்டு பேர் கடந்த வாரம் திடீரென்று மாயமானார்கள். இதையடுத்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிகளை தேடி வந்தார்கள். சிறுமிகள் திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பகுதியில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் இந்த சிறுமிகளுடன் சேர்த்து ஜோமி அகிலேஷ், அனில் குமார் என்ற இரண்டு வாலிபர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருமுருகன் பூண்டிக்கு விரைந்த போலீசார் அங்கிருந்து இரண்டு சிறுமிகளை மீட்டதுடன் சிறுமிகளை திருப்பூருக்கு அழைத்து வந்த அதில் ஜோமி அகிலேஷ், அனில் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இதில் போலீசார் நடத்திய விசாரணையில் வாலிபர்கள் இருவரும் ஆசை வார்த்தை கூறி சிறுமிகளை அழைத்து வந்ததும் பின்னர் சென்னை பழனி உள்ளிட்ட இடங்களில் விடுதிகளில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
செலவிற்கு பணம் இல்லாததால் திருப்பூருக்கு சிறுமிகளுடன் வேலை தேடி வந்தபோது நண்பர்கள் உதவியுடன் திருமுருகன்பூண்டிக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்குள்ள குடிநீர் பாட்டில் தயார் செய்யும் நிறுவனத்திற்கு வேலை செய்ததும் இந்த விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது. தொடர்ந்து கைதான வாலிபர்களிடம் போலீசர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.