30 நிமிடம் நிறுத்தாமல் தற்காப்பு கலை… உலக சாதனை படைத்த 102 மாணவர்கள்…!

30 நிமிடம் நிறுத்தாமல் தற்காப்பு கலை… உலக சாதனை படைத்த 102 மாணவர்கள்…!

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் தச்சக்கோட்டை அருகே உள்ள கடற்கரையில் தற்காப்பு கலையின் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ் தேர்வுக்காக ஆசான் மார்ஷியல் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி இன்டர்நேஷனல் சார்பில் ரெக்கார்ட் அமைப்பின் அதிகாரி ராஜேஷ் குமார் முன்னிலையில் மூன்று வயது முதல் 20 வயதிலான 102 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 30 நிமிடங்கள்பாரம்பரிய கலைகளை நிகழ்த்தி காட்டினர்.

அதன்படி, சுருள் வாழ்வீச்சு, வேல் கம்பு, வாட்டர்பேலன்ஸ், பைட்டிங் ஸ்டிக்ஸ், சிலம்பம் ஒற்றைச் சுற்று, இரட்டை சுற்று ஆகிய தற்காப்பு கலைகளை செய்து காட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் முடிவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பயிற்சி பள்ளிக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டது.

மாமல்லன் தெக்கின் கலரி ஆசான் அசோக்குமார், மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி பதக்கங்களை வழங்கியிருந்தார்கள்.