tamilnadu
நீலகிரியில் நிலச்சரிவா…? பொதுமக்களுக்க முக்கிய அறிவுறுத்தலை வழங்கிய மாவட்ட ஆட்சியர்…!
நிலச்சரிவு ஏற்படும் என்று சமூக வலைதள பக்கங்களில் பரவி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்ற மாவட்ட ஆட்சியர் லட்சுமி திவ்யா தெரிவித்திருக்கின்றார்.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது கேரளா மாநில எல்லைகளை ஒட்டிய நீலகிரி கோவை உள்ளிடம் மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகின்றது. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்படும் என்று சமூக வலைதள பக்கங்களில் தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதைப் பார்த்த அந்த மாவட்ட ஆட்சியர் திவ்யா சில அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி இருக்கின்றார் அதாவது, போலியான செய்திகளை பார்த்து மக்கள் பதட்டம் அடைய வேண்டாம் என்று கூறி இருக்கின்றார்.
மேலும் நிலச்சரிவு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பில் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசுமாறு கூறியிருக்கின்றார். மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் இரவு நேரத்தில் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்திருக்கின்றார். இதுவரை 340க்கும் மேற்பட்ட உயிரிழந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இணையத்தில் தவறான தகவல் பரவி வருகின்றது. இதற்காக மக்கள் யாரும் பயந்து விடக்கூடாது என்பதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்திருக்கின்றார்.