vijay
vijay

அவங்க குடிச்சா இவங்க என்ன பண்ணுவாங்க!…ஆளும் கட்சிக்கு விஜய் ஆதரவா?…

தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியல் களத்தில் தனது என்ட்ரியை கொடுக்க துவங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே தங்களது கட்சிப்பணி துவங்கும் என அறிவித்திருந்தார் விஜய். சொன்னதுபடியே ஸ்பீட் எடுக்க துவங்கி விட்டது. 2026 பொது தேர்தலை மனதில் கொண்டு கட்சியின் அடுத்தடுத்த முன்னெடுப்புக்கள் இருந்து வருகிறது.

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவியரை பாராட்டி, பரிசளிக்கும் விழா சென்னையில் இன்று நடந்தது. தளபதி விஜய் மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பங்கேற்றார்.

சாதனை புரிந்த மாணவ, மாணவியரை பாராட்டி பிறகு பேசிய விஜய் நமது எதிர்காலத்தை நாமே தான் தீர்மானிக்க வேண்டும் என சொன்னார்.

vijay function
vijay function

போதை பழக்கங்களுக்கு அடிமையாகி விடக்கூடாது என அறிவுரை சொன்ன விஜய் விழாவிற்கு வந்தவர்களை போதை பழக்கங்களுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக்கொள்ள வைத்தார்.

தொடர்ந்து பேசும் போது போதை பொருட்களின் நடமாட்டத்தை குறைப்பது அரசாங்கத்தின் கடமை. இந்த பழக்கங்களுக்கு அடிமையானவர்களை காப்பற்றுவதும் அரசின் வேலை தான்.

ஆனால் அதை ஆளும் அரசு தவற விட்டு விட்டதாக சொல்லப்படுகிறது என்றார். அரசு என்னதான் முயற்சி எடுத்தாலும் நம்முடைய பாதுகாப்பை நாமே தான் பார்த்துக்கொள்ள வேண்டும், நம்முடைய வாழ்க்கையை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசு தன்னுடைய கடமையிலிருந்து தவறி விட்டதாக சொல்லப்படுகிறது என விஜய் ஆட்சியில் இருப்பவர்களை சாடிய போதும், இதற்கெல்லாம் அரசு என்ன செய்யும் எனவும் சொல்லியிருப்பது அரசியல் விமர்சகர்களை தீவிரமாக கவனிக்க வைத்துள்ளது.

விழாவில் பேசும்போது இடையே அரசியல் பேசுவதற்கான மேடை இது இல்லை எனவும் குறிப்பிட்டவர், படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பும் விடுத்தார்.