தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தலின் போது வாக்களித்த, வாக்களிக்காதவர்களுககென தனித்தனி செயல்பாடுகள் இல்லாமல் பாகுபாடின்றி எல்லோரும் பொதுவாகவே செயல்பட்டு வருகிறது தமிழக அரசு என பெருமிதத்தோடு சொன்னார்.
ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மக்களுக்கு இருந்த நூறு சதவீத நம்பிக்கையயே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் காட்டி இருந்ததாக சொன்னார். சட்டமன்ற ரீதியாக கணக்கெடுத்து பார்த்தால் திமுக இருனூற்றி இருபத்தி ஓரு இடங்களில் அதிக வாக்குகள் பெற்றிருந்ததாக சுட்டிக்காட்டினார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவை வைத்து பார்க்கும்போது மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள், மக்கள் யாரை புறக்கணித்து உள்ளார்கள் என்பதை தெளிவாக உணர முடியும், அதனால் தான் மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள் நமது முகத்தை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் அவை நடவடிக்கைகளுக்கும், மாண்புக்கும் குந்தகம் விளைவித்து சென்று விட்டார்கள் என பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை போலவே 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக அதிக இடங்களில் வெற்றி பெரும் என நம்பிக்கை தெரிவித்தார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டதை பட்டியலிட்டுக் காட்டி பேசினார். அதே போல கள்ளச்ச்சாராய உயிர் பலி வழக்கில் இதுவரை கைது செய்ய்ப்பட்டவர்களின் எண்னிக்கையை சொல்லியதோடு , இந்த விஷயத்தில் ஒருவர் கூட தப்பி விட முடியாது என ஆவேசமாக சொன்னார்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவை வெற்றியோடே கொண்டாடுவேன் என்ற தனது நம்பிக்கையின் படியே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்தார்.