மாணவி தற்கொலை- ஸ்டாலினின் கடும் கண்டனம்

38

மத்திய அரசு மருத்துவ படிக்கும் மாணவர்களுக்காக நீட் தேர்வு முறையை அமல்படுத்தியது. இதை அறிமுகப்படுத்திய நாளில் இருந்து தமிழகத்தில் பிரச்சினைகளுக்கு குறைவில்லை. பெரும்பாலான கட்சிகள் நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றன.

இருப்பினும் அரியலூர் மாவட்டத்தில் அனிதா என்ற மாணவி நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டது பெரிய அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தியது என கூறலாம்.

இந்நிலையில் இன்று மதுரையை சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவியும் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியும் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மாணவ மாணவிகளை நிலைகுலைய வைப்பதாக இருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் தற்கொலை தீர்வல்ல, நீட் ஒரு தேர்வல்ல என ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

பாருங்க:  பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டாலினை சந்தித்து பேசிய ரஜினி...