Latest News
செந்தில் பாலாஜி மனு…நீதிமன்றம் தள்ளுபடி…தீர்ப்பு தேதி அறிவிப்பு…
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, விடுவிக்க கூடிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரப்பட்ட மனு நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜியின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த விசாரணையானது நடை பெறுவதாக இருந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கிறஞர் வேறு சில வழக்குகளில் தான் இரண்டு நாட்கள் ஆஜராக வேண்டியது இருப்பதால் விசாரணையை ஒத்தி வைக்கக் கோரியிருந்தார்.
மேலும் மனு மீதான உத்தரவு ஜூலை பதினாறாம் தேதி பிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளது நீதிமன்றம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்.