பெற்றோருடன் செல்கிறேன்… கணவனுடன் பேச விருப்பமில்லை – கடத்தப்பட்ட இளமதி பல்டி !

பெற்றோருடன் செல்கிறேன்… கணவனுடன் பேச விருப்பமில்லை – கடத்தப்பட்ட இளமதி பல்டி !

சேலம் மாவட்டத்தில் சாதி மறுத்து பட்டியலின இளைஞரைக் கல்யாணம் செய்து கொண்ட இளமதி கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பட்டியலின இளைஞரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளமதி என்ற இடைநிலை சாதி பெண் கடத்தப்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் இன்று அவர் திடீரென காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞருடன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து காதலருடன் சேர்வார் என எதிர்பார்த்த நிலையில் திடீர் திருப்பமாக தனது பெற்றோருடன் செல்வதாக அறிவித்துள்ளார். மேலும் தனது காதலருடன் பேச விருப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.