அமமுக என்னுடைய கட்சி என நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சில அமமுக நிர்வாகிகளுடன் பெங்களூர் புகழேந்தி தினகரனுக்கு எதிராக பேசிய வீடியோ சமீபத்தில் வெளியானது. இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என தினகரன் கூறியிருந்தார். எனவே, அமமுகவில் புகழேந்தி இருக்கிறாரா இல்லையா என்பதிலேயே குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் புகழேந்தி கூறியதாவது:
அமுமுகவில் என்னை நீக்கிவிட்டதாக இதுவரை டிடிவி தினகரன் கூறவில்லை. அமமுக தொண்டர்கள் கொத்துகொத்தாக கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும்ம. மண்டல பொறுப்பாளர்களால் கட்சி பாதி அழிந்து விட்டது.
நாளுக்கு நாள் தொய்வு அடைந்து வரும் கட்சியை டிடிவி தினகரன் சரி செய்யாதது வருத்தமளிக்கிறது. அமமுக நான் ஆரம்பித்த கட்சியென ஆதங்கத்தில் சொன்னேன். கட்சிக்காக அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் . இதற்கு டிடிவி தினகரன் தான் பதிலளிக்க வேண்டும். சசிகலாவிற்கு ஆதரவாக முதல் முதலாக குரல் கொடுத்தது நான்தான். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக புத்தகம் எழுத இருக்கிறேன். அதில் பல உண்மைகள் வெளிவரும்.
என அவர் தெரிவித்தார்.