புதுச்சேரி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் – அதிமுக கூட்டணியில் ஒப்பந்தம்

246
Pudhuchery is alloted to N.R.Congress

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள என்.ஆர்.காங்கிரஸுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இன்று சென்னை வந்த ரங்கசாமி ஓ.பி.எஸ், எடப்பாடி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்படி, புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாருங்க:  திருப்பூரில் உருவாக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கம் – குவியும் பாராட்டுகள்!