Latest News
முதலமைச்சர் தாயை பழித்து பேசிய விவகாரம்- பிரதமர் மோடி கண்டனம்
பாஜக வேட்பாளர் முருகனை ஆதரித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் இதில் முதல்வர் துணை முதல்வர் இருவரும் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டில் தரமான பொம்மைகள் தயாரிக்கும் மையம் அமைய உள்ளது என பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வாங்கி தயவு செய்து படியுங்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும் முதல்வர் பழனிச்சாமியின் தாயை தவறாக திமுகவின் ஆ ராசா தவறாக பேசியுள்ளதை தன் பங்குக்கு மோடியும் இக்கூட்டத்தில் கண்டித்துள்ளார். ஒரு முதலமைச்சரின் தாயையே தவறாக பேசுவது தவறானது என மோடி கூறியுள்ளார்.
