Latest News
கள்ளக்குறிச்சி சம்பவம் உயர்ந்த பலி எண்ணிக்கை…பா.ஜ.க.வினர் திடீர் கைது…வலுக்கும் கண்டனம்…
கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரம் தொடர்ந்து தமிழகத்தையே உலுக்கி வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆறுதல் சொல்லப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகீட்சை அளிக்கப்பட்டும் வருகிறது. தமிழக அரசு பலியானோர், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் எல்லாம் இந்த விவகாரத்தில் ஆளும் திமுக அரசிற்கு எதிராக தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் கடுமையாக பதிவு செய்து வருகிறார்கள். உயிர் பலி வாங்கிய இடத்தை சுற்றி காவல் துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உயிர் பலி தொடர்ந்து அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கள்ளச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த துயர சம்பவத்திற்கு அரசின் மெத்தனப்போக்கே காரணம் என குற்றம் சாட்டிய பா.ஜ.க. தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, தனது கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
அதன் படி நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் பலரும் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற மக்கள் கழக தலைவர் டி.டி.வி. தினகரன், காவல் நிலையத்திற்கு பின்னாலேயே கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இது முதல்வர் கவனத்திற்கு செல்லவில்லையா?, அல்லது அவரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லையா? என சராமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதிவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளார் தினகரன்.